jeevan-works-logo
booked.net
ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு:

ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்றார்.  

 தீவிரவாதத்தை அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் உரையாற்றினார்.

 20 மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.  மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கான உறவு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க இரு தலைவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி தீவிரவாதம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு பொதுவான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அனைவரும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் உரையாற்றினார். பின்னர் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்பு,  தீவிரவாதம், சுற்றுச்சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பொதுவாகவே தீவிரவாதம் குறித்து மூன்று நாடுகளும் ஒருமித்த கருத்தை வெளியிட்டிருக்கின்றன. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக பிரதமர் மோடி பின்னர் தெரிவித்தார். 

வீடியோ செய்திகள்