jeevan-works-logo
booked.net
21 ம் ஆண்டு கார்கில் வெற்றி தினம்.. உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம்.. மலரஞ்சலி..

Published: Sunday, Jul 26,2020 ,08:55:38pm

 21ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

21ம் கார்கில் ஆண்டு தினம் இன்று(26.07.2020) கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன.  டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  முப்படைகளின் தளபதிகளும் இதில் பங்கேற்றனர்.

 சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  இதில் மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா உட்பட முப்படையை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.  மேலும் கார்கில் போரில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

வீடியோ செய்திகள்