jeevan-works-logo
booked.net
2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரல்வளையை நசுக்கும் ஒரு முயற்சி..!!

Published: Sunday, Jul 26,2020 ,09:01:06pm

2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை  பொது மக்களை கடுமையாக  பாதிக்கும் என சூழலியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  இந்த வரைவை தமிழ் உட்பட 22 மொழிகளை வெளியிட நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தும் இன்னும் வெளியிடவில்லை.

 பெரு நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள் இப்போது தொழிற்சாலைகள் தொடங்க, 2006 சட்டத்தின் கீழ் திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்ய வேண்டும்,  சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அரசு அனுமதி வழங்கும்.  அப்படி இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கவே செய்யும்.

 இந்த நடைமுறையை மாற்றி அமைத்து சுற்றுச்சூழல் தாக்க வரைவு  2020 என்கிற பெயரில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டு தொழில்களுக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு நடைமுறையை  இந்த புதிய வரைவு தடை செய்கிறது.  அதே போல் தொழிற்சாலைகள் குறித்த கருத்து கேட்புக்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து இருபது நாட்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை இல்லாமலேயே ஒரு திட்டத்தை தொடங்கவும் ஏற்கனவே உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு அனுமதியளிக்கிறது.  திட்டம் தொடங்கப்பட்ட பிறகு ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த திட்டத்தை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மாநில மத்திய குழுக் கள் என்று இரு அமைப்புகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்படும் என்றும்,  மாநில அரசின் அதிகாரம் குறையும் என்றும் கூறுகின்றனர் ஆர்வலர்கள். 

சதுப்பு நிலங்களில் மண்ணைப்போட்டு சமன்படுத்த அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும்,  வறண்ட புல்வெளிகளை தரிசு நிலங்களாக கணக்கில் கொண்டு தொழிற்சாலை தொடங்கலாம் என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 புதிய வரைவில் உள்நாட்டு நீர்வழிகள் தேசிய நெடுஞ்சாலை உட்பட சில துறைகளில் திட்டங்கள் தாக்க மதிப்பீட்டு எல்லைக்கு அப்பாற்பட்டதாக வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதிய  திட்டங்களுக்கு சூழலில் தாக்க மதிப்பீட்டில் இருந்து விலக்கு பெற 20,000 சதுர மீட்டர் என்று இருந்த வரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வழக்கு ஒன்றில் இந்த வழக்கு மீதான பொது மக்கள் கருத்துகேட்பு கான கால அவகாசத்தை டெல்லி நீதிமன்றம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்தும்,  வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் வெளியிடவும்  நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து 26 நாட்கள் ஆகின்றன.

வீடியோ செய்திகள்