jeevan-works-logo
booked.net
மூவாயிரம் கொரோனா நோயாளிகளை காணோமாம்... மக்களோடு மக்களாய் கலந்த விபரீதம்.. பெங்களூரு அதிர்ச்சி..!!

Published: Sunday, Jul 26,2020 ,09:07:53pm

கர்நாடகாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காணாமல் போயுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

கர்நாடகாவில்  கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  சனிக்கிழமை ஒரே நாளில் ஐயாயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

 கடந்த மூன்று நாட்களாகவே நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.  கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.  பெங்களூருவில் மட்டும் நாற்பத்து மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ள. 

சுமார் 32,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பெங்களூருவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

 இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று  பரவ தொடங்கியது முதல் தற்போது வரை தோற்று உறுதி செய்யப்பட்ட 3,338 பேரின் முகவரியை கண்டறிய முடியவில்லை என மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார். 

 அவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது அளித்த முகவரி தவறானது என்றும் அவர்களை தேடி வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.  தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்களுடன் கலந்து விட்டது கொரோனாவின் வேகத்தை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

வீடியோ செய்திகள்