jeevan-works-logo
booked.net
இதுவரை தப்பித்துவந்த வடகொரியாவில் கொரோனா.. சும்மாவே அங்க ஊரடங்கு மாதிரிதான் இருக்கும்.. இப்போ சொல்லவே வேண்டாம்..

Published: Sunday, Jul 26,2020 ,09:10:22pm

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று வட கொரியாவிலும் கால் வைத்துள்ளது.  இதையடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.  இதுவரை உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் ஒரு கோடியே 62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதோடு சுமார் 6 இலட்சம் பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அதிகளவாக அமெரிக்காவின் 43 லட்சம் பேரும்,  பிரேசிலில் 23 லட்சம் பேரையும் கடந்துள்ளது.  எனினும் கடந்த 7 மாதங்களாக கொரோனாவில் இருந்து வட கொரியா தப்பி வந்தது நிலையில் வடகொரியாவில் ஒருவருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. 

 இதையடுத்து அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்,  நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். 

சும்மாவே அந்த நாட்டில கெடுபிடிகள் அதிகம். இப்போ சொல்லவே வேண்டாம்.

வீடியோ செய்திகள்