jeevan-works-logo
booked.net
குஜராத்தில், மகாராஷ்டிராவில் கனமழை. புனேவில் சுவர் இடிந்து 15 பேர் உயிரிழப்பு:

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.  புனேவில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இவர்கள் அனைவரும் அருகிலிருந்த குடிசைகளில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தன் குடிசைக்கு சுவர் இல்லாத போதும் போதும்,  அடுத்தவரது சுவர் இடிந்து விழுந்தாலும் அது இல்லாதவன் தலை மேலே விழுகிறது. இந்த கொடுமையை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

இந்த விபத்தில் மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இந்த விபத்து இல்லாமல் மழை காரணமாகவும் மின்சாரம் தாக்கியும் மேலும் ஒரு எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு இடங்களில் இடிபாடுகளில் மாற்றம் மற்றும் கார்கள் சிக்கியிருக்கின்றன. இவற்றை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வீடியோ செய்திகள்