jeevan-works-logo
booked.net
32 ஆயிரம் கோடி முதலீடு :: 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல்..!!

Published: Tuesday, Jul 28,2020 ,08:52:16pm

 32,368 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.  23 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கேப்டன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் என மொத்தம் எட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 

 இதன் மூலம் 24 ஆயிரத்து 870 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 608 கோடி முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்  குளோவிஸ்,  ஹூண்டாய் நிறுவனத்தின் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு திட்டம் உட்பட 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் திட்டங்கள் வாயிலாக தமிழகத்திற்கு சுமார் 6 ஆயிரத்து 955 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

வீடியோ செய்திகள்