jeevan-works-logo
booked.net
கொரோனாவிலிருந்து வீடு திரும்பியவர் தூக்கில் தொங்கினார்.. மனைவி குழந்தைகள் தாய் வீட்டிலிருந்து வரவில்லை என்பது காரணமாம்..!!

Published: Tuesday, Jul 28,2020 ,08:58:17pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தென்கரையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த 52 வயதான துரை என்பவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.  வீட்டில் தனிமையில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலும்,  குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வீடியோ செய்திகள்