jeevan-works-logo
booked.net
கேரள தங்கக்கடத்தல் தொடர்பாக திருச்சியில் விசாரணை..!! பல தலைகள் உருளும் அபாயம்..!!

Published: Tuesday, Jul 28,2020 ,09:00:23pm

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக திருச்சியில் NIA  அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து கேரளாவிற்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷ்  உள்ளிட்ட பலரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 இந்த விசாரணையில் கடத்தல் தங்கத்தை திருச்சியில் உள்ள முகவர்கள் மூலம் நகைக்கடை அதிபர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது என்று NIA  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திருச்சியின் சில பகுதிகளில் தங்க விற்பனை முகவர்கள் நகைக்கடை அதிபர்கள் உள்ளிட்ட 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  மேலும் சுங்க துறைகளில் பணியாற்றுவோர்,  பணியாற்றி ஓய்வு பெற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ செய்திகள்