jeevan-works-logo
booked.net
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வேண்டும்.. அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை!!

Published: Tuesday, Jul 28,2020 ,09:02:48pm

சினிமா படப்பிடிப்பை தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

 ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை  இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜன்  உள்ளிட்டோர் சந்தித்து சினிமாவை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க கோரினர்.

வீடியோ செய்திகள்