jeevan-works-logo
booked.net
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு எதிராக மக்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் :: நடிகர் கார்த்தி வலியுறுத்தல்.!!

Published: Tuesday, Jul 28,2020 ,09:09:37pm

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறைக்கு எதிராக கருத்துக்களை மக்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார். 

 உழவன் என்ற அமைப்பை நடத்தி வரும் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறை நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்காமலேயே நிறைவேற்றலாம் என்ற ஷரத்து மிகப்பெரிய அவநம்பிக்கையையும்,  அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். 

 இயற்கை வளங்களை அழித்து தொழிற் சாலைகள் அமைப்பது வளர்ச்சி அல்ல என்றும் இது நியாயமான சட்டமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

 எனவே இந்த வரைவு அறிக்கையில் உள்ள சாதக பாதகங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்,  அதற்கான மின்னஞ்சல் முகவரியில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அனைவரும்  eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் நமது எதிர்ப்பை பதிவு செய்வோம். 

வீடியோ செய்திகள்