jeevan-works-logo
booked.net
மாரிதாசுக்கு ஒன்றரை கோடி அபராதம்..!! நியூஸ் 18 சேனல் அதிரடி நடவடிக்கை..!!

Published: Wednesday, Jul 29,2020 ,09:06:10pm

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு மாரிதாசுக்கு  இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுவரை வெளியிட்ட வீடியோக்களையும் யூடியூபில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் யூட்யூப் வீடியோக்களை வெளியிட்ட மாரிதாஸ் போலி இ-மெயில் முகவரியை உருவாக்கி கொண்டு தவறான தகவல்களை வெளியிட்டு வந்தார்.

 இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த  நியூஸ் 18 தொலைக்காட்சி நிர்வாகம்,  ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தது. 

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி  கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது,  மக்களிடையே மதரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையிலும்,  செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக நியூஸ் 18 சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து தனிநபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிடக்கூடாது என மாரிதாசை கண்டித்த நீதிபதி கார்த்திகேயன்,  சமூக வலைதளங்களில் இதுவரை மாரிதாஸ் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டார்.  வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

வீடியோ செய்திகள்