jeevan-works-logo
booked.net
ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி; பிளஸ் டூ வரை இலவச கட்டாயக் கல்வி..!! புதிய கல்விக் கொள்கை!!!

Published: Wednesday, Jul 29,2020 ,09:08:10pm

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  பிளஸ் டூ வரை இலவச கட்டாயக் கல்வி, ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் பாடம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 1992 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர அமைக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அறிக்கையை மத்திய அரசிடம் இன்று அளித்தது.  

சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி அமைப்பில் மிகப்பெரும் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதன்படி உயர் கல்வியை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்/ தொழிற்கல்வி, ஆசிரியர் பயிற்சி படிப்பு, தொழில்நுட்ப படிப்புகள் ஆகிவை ஒருங்கிணைக்கப்படும்.

 புதிய தரமான உயர்கல்வி நிறுவனங்களை அமைக்கப்படும். பின்தங்கிய பிராந்தியங்களில் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கப்படும்.  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  - கல்வித் துறை அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதோடு பள்ளி கல்வியில் புதிய தேசிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியும் நடத்த வேண்டும். அதை எட்டாம் வகுப்பு வரை நீடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ வரை இலவச கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 உயர்கல்வி நிறுவனங்களில் செல்வதற்கு பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகளை நடத்த மற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய தர நிலை உருவாக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்