jeevan-works-logo
booked.net
திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கட்டமைப்பு அரசுக்கு பரிந்துரை..

Published: Wednesday, Jul 29,2020 ,09:14:06pm

திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கட்டமைப்பு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

திரைத்துறையை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திரையரங்குகளை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருந்திருக்கிறது.

 திரையரங்குகள் திறக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்து இருக்கிறது.

 அதன்படி திரையரங்கம் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.  திரையரங்கிற்கு வரும் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ஊழியர்கள் பணிக்கு வரும் போதும் திரும்பும் போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

 ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்கி அவர்கள் எப்போதும் அணிந்து இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். பார்வையாளர்களுடன் மற்றும் சக ஊழியர்களுட்ன கைகுலுக்குவதோ தொடுவதோ கூடாது. ஊழியர்கள் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கைகழுவுவதை கட்டாயமாக்க வேண்டும்.  திரையரங்கின் வெவ்வேறு பகுதிகளில் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.

 பணம் அல்லது டிக்கெட் போன்றவற்றை கொடுத்து வாங்குவதை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

 பார்வையாளர்கள் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.  திரையரங்கில் இருக்கைகளுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். நுழைவாயிலில் பார்வையாளர்களை பரிசோதிக்கும் முறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

மல்டிபிளக்ஸ் அரங்குகளில்  திரைப்படம் துவங்கும் நேரம்,  இடைவேளை ஆகியவை வெவ்வேறு நேரங்களில் வருமாறு அமைக்கப்படவேண்டும். 

 ஊழியர்கள் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. 

இந்நிலையில்  ஜூலை 31 க்கு பிறகு திரையரங்குகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

வீடியோ செய்திகள்