jeevan-works-logo
booked.net
நடிகர் சுஷாந்த்  தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!! சுஷாந்தின் காதலி மீது தந்தை போலீசில் புகார்!!

Published: Wednesday, Jul 29,2020 ,09:16:41pm

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த்  வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரின் பெண் தோழியும் நடிகையுமான ரியா  சக்ரபர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியது,  நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.  அவர் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை தெரிவித்தது. 

நடிகர் சுஷாந்தின் தற்கொலை பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து கடுமையான விவாதங்கள் நடந்தேறின. 

சுஷாந்த்  மரணம் தொடர்பாக ரியா சக்ரபர்த்தி மற்றும் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி,  ஆதித்யா சோப்ரா, கரன் ஜோகர் உட்பட 40 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் மும்பை போலீசார் திணரினர். 

சுஷாந்த்  மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நடிகை சுஷாந்த்தின் நெருங்கிய தோழியான ரியா சக்கரவர்த்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

 மேலும் ஜூலை 14ஆம் தேதி அதாவது சுஷாந்த்  இறந்த முப்பதாவது நாள் ரியா சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் குறித்து ஒரு உருக்கமான கடிதத்தை பதிவிட்டிருந்தார்.  அதில் உன்னை இழந்து 30 நாட்கள் ஆகிறது.  ஆனால் உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருந்தார்.

 இந்த நிலையில் ரியா சக்ரபர்த்தி தான் சுஷாந்த்  சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை  ரியா சக்கரவர்த்தி மீது பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்தார்.

 நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும்,  மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகாரில் அவர் தெரிவித்தார்.  இந்த புகாரின் பேரில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியது,  நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

 மேலும் 4 பேர் கொண்ட குழு மும்பை விரைந்துள்ளது.  வழக்கு குறித்த விபரங்களையும் முக்கிய ஆவணங்களையும் மும்பை போலீசிடம் இருந்து பெற்று வர உள்ளதாகவும் கூறியுள்ளார். 

சுஷாந்தின்  வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் 15 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும்,  வங்கி கணக்கை தோழி மற்றும் குடும்பத்தினர் கையாண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 தற்கொலை வழக்கில் ரியாவை போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை அழைக்கவும்,  கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோ செய்திகள்