jeevan-works-logo
booked.net
வெள்ளையானை!! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சுவாமி வீதிஉலா ஊரடங்கு காரணமாக ரத்து..

Published: Wednesday, Jul 29,2020 ,09:18:22pm

ஆடி சுவாதி திருநாளை  முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் சுவாமி வீதிஉலா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி அன்று அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்திக்கு  ஐராவதம் யானை மீது சுவாமி சிவபெருமான் காட்சி அளிக்கும் நிகழ்வு நடைபெறும் . 

அதன்படி இன்று கோவில் யானைக்கு திருநீறு மற்றும் வெள்ளை மாவு கலந்து பூசப்பட்டது.  வெள்ளை யானை முன் செல்ல சுவாமி சுந்தரமூர்த்தி நாயனார் சிறிய பல்லக்கிலும்,  சுவாமி சேரமான் பெருமான் சிறிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி உலா நடைபெற்றது.

வீடியோ செய்திகள்