jeevan-works-logo
booked.net
 கலை அறிவியல் கல்வியை காவி மயமாக்கும் முயற்சி!! திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்!!

Published: Wednesday, Jul 29,2020 ,09:19:36pm

 கலை அறிவியல் கல்வியை காவி மயமாக்கும் முயற்சிக்கு  தமிழக அரசு நிச்சயம் அனுமதிக்க கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதற்கான நேர்காணல் காணொளி காட்சி மூலம் நடைபெற்றதை குறிப்பிட்டுள்ளார்.  தேர்வுக்குழு தலைவராக ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமித்தது முதல் கோணல் எனக் கூறியுள்ளார்.

 177 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நிலைகள்,  அதில் 12 பேர் மட்டும் இறுதி கட்ட நேர்காணலுக்கு அழைத்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின்,  நேர்காணலுக்கு வந்தவர்களை பிற்படுத்தப்பட்டோர்,  பட்டியல் இனத்தவர் எத்தனை பேர் என்ற விவரங்களை ஆளுநரும்,  தமிழக அரசும் வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார்.

 தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வியாளர் ஒருவரை சென்னை பல்கலை துணைவேந்தராக நியமிப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

வீடியோ செய்திகள்