jeevan-works-logo
booked.net
ஆகஸ்ட் 1ல் இருந்து எவை எவை இயங்கும்.. இயங்காது.. இ பாஸ் வாங்கனுமா வேண்டாமா..? முழுத்தகவல்கள்..

Published: Thursday, Jul 30,2020 ,08:50:43pm

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும். 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மருத்துவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடியஊரடங்கை  ஆகஸ்ட் 31 வரை அமல்படுத்த  முடிவு செய்யப்பட்டது.

 அதன்படி தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 75 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  உணவகங்கள் தேனீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 முதல் இரவு 7 மணி வரை உணவருந்தலாம்.  குளிர்சாதன வசதி இருந்தால் அவை இயக்கக்கூடாது.

 இதே போல் இனி காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்கும்.  மற்ற கடைகள் எல்லாம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம். 

10,000 ரூபாய்க்கு குறைவாக வருமானமுள்ள சிறிய கோவில்கள் பொதுமக்கள் தரிசனத்திற்கான அனுமதி தொடர்கிறது.  அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய மற்ற பொருட்களை மின் வணிக நிறுவனங்கள் மூலம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 10,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லை.

 ஐந்து நபருக்கு மேல் ஒன்று கூட கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். ரயில் மற்றும் விமான போக்குவரத்தை பொருத்தவரை மெட்ரோ ரயில் மற்றும்  மின்சார ரயில் சேவைக்கான தடை தொடர்கிறது.  இதேபோல் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையும் தொடர்கிறது.

 மாநிலங்களுக்குள்ளும்,  மாநிலங்களுக்கு இடையேயும் தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது.

 மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும்,  வெளி மாநிலம் செல்லும் போதும் இ பாஸ் பெற வேண்டியது கட்டாயமாகும். 

 சுற்றுலாத் தலங்களுக்கும் வெளியூர் பயணிகள் செல்ல அனுமதி கிடையாது.  வணிக வளாகங்கள், ரிசார்ட்டுகள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்களை திறக்க அனுமதி இல்லை.

மால்கள்,  திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள், மதுக்கூடங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதி இல்லை.

 பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது.  அதேசமயம் பள்ளி கல்லூரிகளில் இணையவழி கற்றல் தொடர்வதை ஊக்குவிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.  சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படும். 

 ஜூலை மாதம் போலவே ஆகஸ்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருக்கும்.  இந்த அனைத்து கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வீடியோ செய்திகள்