jeevan-works-logo
booked.net
மருத்துவ உபகரணங்கள் என்று சொல்லி ஹாங்காங்கில் இருந்து கடத்தப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள்..!!

Published: Thursday, Jul 30,2020 ,08:54:35pm

மருத்துவ உபகரணங்கள் என்று சொல்லி ஹாங்காங்கில் இருந்து கடத்தப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஹாங்காங்கிலிருந்து மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் விலை உயர்ந்த செல்போன்கள் கடத்தப்பட்டு வந்தது தற்போது அம்பலமாகி இருக்கிறது.  ஆக்ஸிமீட்டர் போன்ற உயிர்காக்கும் மருத்துவப் பொருட்கள் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் விலை உயர்ந்த 40 செல்போன்களை பதுக்கி கடத்தி வந்தது தற்போது அம்பலமாகி இருக்கிறது. 

 இதன் மதிப்பு சுமார் 70 லட்ச ரூபாய் என்று விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தற்பொழுது சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப் படாத சாம்சங் கேலக்ஸி மொபைல் போன்கள் இதில் சிக்கி உள்ளனர். .  ஒரு செல் போனின் விலை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்று அதிகாரிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

 சர்வதேச அளவில் விமான பயணிகள் சேவை இன்னும் தொடங்காத நிலையில் தற்பொழுது பார்சல்ல் மூலமாக இந்த கடத்தல் கும்பல் தங்களது குற்றங்களை அரங்கேற்றி வருவது தற்பொழுது விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. 

 பாரிமுனை யைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெயரில்தான் இந்த முறைகேடு நடந்து இருப்பதாக தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.  எனவே இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரிக்கவும் சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

வீடியோ செய்திகள்