jeevan-works-logo
booked.net
கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைந்தது.. நிம்மதி!! ஆனால் இறப்பு எண்ணிகை ஒரே நாளில் 97 பேர்!!

Published: Thursday, Jul 30,2020 ,08:56:29pm

தமிழகத்தில் ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  கொரோனா காரணமாக உச்சபட்சமாக ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர்.

 தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் 5,864 பேருக்கு தொற்று உறுதியானதாகவும், மொத்த பாதிப்பு 2 லட்சத்து 39 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் ஏழு நாட்களுக்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

 சென்னையில் தொற்று ஓரளவு கட்டுக்குள் உள்ள நிலையில்,  புதிதாக 1175 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர்.  இதனால் தமிழகத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 3.738 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,795 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஒரே நாளில் 59 ஆயிரத்து 437 பேருக்கு ஒரு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது இதில் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் தலா 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 7 நாட்களுக்கு பின்னர் 5 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.

வீடியோ செய்திகள்