jeevan-works-logo
booked.net
டெல்லியை  பாருங்க... நீங்களும் குறைங்க.. தமிழக அரசும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை!!

Published: Thursday, Jul 30,2020 ,09:00:00pm

டெல்லியை  பின்பற்றி தமிழக அரசும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

 இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டீசல் மீதான வாட் வரி குறைப்பின் மூலம் டீசலின் விலை 9 ரூபாய் வரை குறைத்து இருக்கும் டெல்லி அரசின் முடிவை வரவேற்பதாகவும்,  இதேபோன்று தமிழக அரசும் டீசல் விலையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 டீசல் விலை குறைப்பு விலைவாசி குறைய உதவும் என்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசின் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீடியோ செய்திகள்