jeevan-works-logo
booked.net
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

Published: Friday, Jul 31,2020 ,09:41:15am

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  மேலும் கபினி,  கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வீடியோ செய்திகள்