jeevan-works-logo
booked.net
ஏழு ஆண்டுகள் , அதற்கும் குறைவான தண்டனைகள் பெரும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தகுந்த ஆதாரமில்லாமல் கைது செய்யக் கூடாது!! தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு..

Published: Thursday, Jul 30,2020 ,09:02:19pm

ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைகள் பெரும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தகுந்த ஆதாரமில்லாமல் கைது செய்யக் கூடாது என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை மகன்  உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் தமிழக காவல்துறைக்கு எதிரான பெரும் சர்ச்சையாக உருவான நிலையில்,  உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தமிழக டிஜிபி திரிபாதி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தகுந்த காரணங்கள் அல்லது முகாந்திரம் இல்லாமல் கைது செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டால் அதனை எழுத்து மூலமாக பதிவு செய்த பின்பே கைது செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனை முறையாக பின்பற்றாத  விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்