jeevan-works-logo
booked.net
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்..

Published: Thursday, Jul 30,2020 ,09:03:31pm

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து எட்டு பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றில்  இருந்து மாணவர்களை பாதுகாக்க  இணையதளம் மூலம் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். www.tneaonline.org என்ற பக்கத்தில் மாணவர்கள் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ செய்திகள்