jeevan-works-logo
booked.net
புதிய கல்விக்கொள்கை  திட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியாக தெரிவிக்க வேண்டும் :: திமுக வலியுறுத்தல்..

Published: Thursday, Jul 30,2020 ,09:05:49pm

புதிய கல்விக்கொள்கை  திட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

 காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  சூழல் தாக்க மதிப்பீடு 2020 ஐதிரும்பப் பெற வேண்டுமென்றும்,  நாடாளுமன்றம் கூடிய பிறகு உரிய விவாதம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அதேபோன்று பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும்,  சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளை புறக்கணித்து ஒருதலைப்பட்சமான புதிய கல்விக் கொள்கையை ஏற்கமுடியாது என்றும் திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்