jeevan-works-logo
booked.net
ஏரியில் மீன் பிடித்த வழக்கில் விமல் மற்றும் சூரி ஆகியோரை அழைத்து வந்த வாகனங்களும் பறிமுதல்..!!

Published: Thursday, Jul 30,2020 ,09:08:21pm

கொடைக்கானலில் ஏரியில் மீன் பிடித்தது  தொடர்பான வழக்கில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோரை அழைத்து வந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே அனுமதியின்றி சென்று அங்கு மீன்பிடிப்பது தொடர்பாக சூரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்று அவர்களை கொடைக்கானலுக்கு அழைத்து வந்த வடகவுஞ்சி சேர்ந்த கருப்பு நாதன் என்பவருடைய வாகனமும் அவர்களுக்கு உணவு கொண்டு சென்று வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

 மேலும் நடிகர்களின் வாகனம் யார் வீட்டில் நிறுத்தப் பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய காதர்பாட்சா என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்