jeevan-works-logo
booked.net
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில்  அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்ட விவகாரம்..

Published: Thursday, Jul 30,2020 ,09:11:33pm

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில்  அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்டதோடு, சிலை  அருகே குப்பைகளும் போடப்பட்டிருந்தன.

 அதிகாலையில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் காவிக் கொடியும் குப்பைகளை அகற்றினர். சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. புதுச்சேரியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டது.

 இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் அண்ணா சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.  சட்டம் ஒழுங்கு சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள தனித்தன்மை இல்லாததால் மறைந்த மாமேதை மீது வன்மம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  தலைவர்கள் சிலையை அவமதிப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற செயல்கள் தொடர்வதாக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

 இதேபோல் பாஜக மாநில பொதுச்செயலர் கி வீரமணி உள்ளிட்டோரும் அண்ணாசிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே அண்ணா சிலை அவமதிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீசார் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரை கைது  செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

வீடியோ செய்திகள்