jeevan-works-logo
booked.net
தனது எண்ணிலிருந்தே வந்த அழைப்பு..!! அதிர்ந்துபோன நடிகர் சரத்குமார்...

Published: Thursday, Jul 30,2020 ,09:15:07pm

நடிகர் சரத்குமார்,  அவர் பயன்படுத்தும் செல்போன் எண்ணிற்கு அவர் பயன்படுத்தும் அதே எண்ணில் இருந்தே  அழைத்து மோசடிகளில் ஈடுபட்ட நபர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் , விஐபிகளுக்கு சரத்குமார் எண்ணிலிருந்து அழைப்பு சென்றுள்ளது.  சம்மந்தப்பட்டவர்கள் திருப்பி அழைத்து சரத்குமாரிடம் விசாரித்துள்ளனர்.  அப்போது தான் போன் செய்யவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார்.

 அந்த சமயத்தில் தான் அந்த மர்ம நபர் சரத்குமார் பயன்படுத்தி வரும் அதே எண்ணில் இருந்து அவருக்கு போன் செய்துள்ளார்.  கோவையில் இருந்து அசோக் பேசுகிறேன் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசிய இளைஞரிடம் தனது எண்ணிலிருந்து பேசும் நீங்கள் யார்,  எனது எண்ணில் எப்படிப் பேசுகிறீர்கள் என்று சரத்குமார் கேட்டுள்ளார். 

மேலும்  டுப்ளிகேட் கால் குறித்து சென்னை பெருநகர காவல்துறையில் சரத்குமார் புகார் அளித்தார்.  புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் டூப்ளிகேட் கால் செய்தவருக்கு சரத்குமாரின் எண் எப்படி கிடைத்தது,  அவருடைய உண்மையான பெயர் அசோக் தானா,  அவர் கோவையில் இருந்து தான் பேசினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

வீடியோ செய்திகள்