jeevan-works-logo
booked.net
ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டார் குஷ்பு.. மேலும் தான் ரோபோவோ அல்லது  தலையாட்டும் பொம்மையோ இல்லை என்றும் விளக்கம்..

Published: Friday, Jul 31,2020 ,10:31:30pm

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தது தொடர்பாக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,  மனதில் பட்டதை பேசாமல் இருப்பதற்கு தான் ரோபோவோ அல்லது  தலையாட்டும் பொம்மையோ இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

 குஷ்புவின் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

காங்கிரஸ் உள்ளிடா பல கட்சிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த  சூழலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்பதாக தெரிவித்தார்.

 எனவே குஷ்பு பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட,  குஷ்புவுக்கு புதிய சிக்கல் உருவானது.

 முதலில் தான் பாரதிய ஜனதாவில் இணையவில்லை என ஒவ்வொரு வீட்டுக்கும் பதில் அளித்து வந்த குஷ்பு,  பின்னர் தனது கருத்துக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

 புதிய கல்விக் கொள்கையில் உள்ள நேர்மறையான கருத்துகளை மட்டுமே தான் குறிப்பிட்டதாகவும்,  எதிர்மறையான அம்சங்களை விவாதித்து பின்னர் சரி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.  இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை சரிசெய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் குஷ்பு தெரிவித்தார். 

 மேலும் தனது கருத்துக்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கும் அவர்,  தான் மனதில் பட்டதை பேசி விடுவதாகவும்,  தான் ரோபோவோ அல்லது  தலையாட்டும் பொம்மையோ  இல்லை என்றும் கூறியிருக்கிறார். 

 மேலும் தலைமைச் சொல்லும் அனைத்திற்கும் சரி என்று  சொல்ல வேண்டியது இல்லை என்றும்,  ஒரு குடிமகளாக தனக்கு  தோன்றிய கருத்துக்களை கூற  துணிச்சலும் தனக்கு இருப்பதாகவும் கூறினார். 

 குஷ்புவின் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,  கட்சியை மீறி கருத்துச் சொல்வதற்கு பெயர் ஒழுங்கீனமான செயல் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி விமர்சித்திருக்கிறார். 

 குஷ்பு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அவர் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து சுதந்திரம் உண்டு என்றும் காட்சிகள் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு எனவும் தெரிவித்திருக்கிறார். 

வீடியோ செய்திகள்