jeevan-works-logo
booked.net
பிளஸ் 1 தேர்விலும் இந்த ஆண்டும்  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி..!! என்னாடா பசங்களா..!!

Published: Friday, Jul 31,2020 ,10:32:49pm

இந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் 96.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்த ஆண்டும்  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் மொத்தம் 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 பேர் தேர்வு எழுதிய நிலையில் 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

 மொத்தமுள்ள 7249 மேல்நிலைப்பள்ளிகளில் 2716 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

 மாணவியர் 98.49 சதவிகிதமும் மாணவர்கள் 94.38 சதவீதமும் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 3.11 சதவிகிதம் கூடுதலாக உள்ளது.  

பாடவாரியாக இயற்பியலில் 96.8 சதவிகிதம், வேதியலில் 99.9 சதவிகிதம், உயிரியலில் 97.7 4 சதவிகிதம், கணிதத்தில் 98.5 6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். 

 98.7 சதவிகித தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கோவை மாவட்டம் முதலிடம் பிடித்திருக்கிறது.  விருதுநகர் 97.9 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்திலும்,  தரூர் 97.5 1 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.  88.6 8 சதவீத தேர்ச்சி பெற்ற விழுப்புரம் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் கடைசி இடம் கிடைத்திருக்கிறது.

வீடியோ செய்திகள்