jeevan-works-logo
booked.net
நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!

Published: Friday, Jul 31,2020 ,10:35:17pm

நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.  இதற்கு தடை விதிக்க கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில் 40 சதவிகித தொகையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்றும்  35 சதவிகித தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தார்.

 இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சில பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.  இதனைக் கேட்ட நீதிபதிகள் முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

 மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். 

வீடியோ செய்திகள்