jeevan-works-logo
booked.net
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான முகூர்த்த நேரம் ..!!

Published: Friday, Jul 31,2020 ,10:38:21pm

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது.  ராமர் பிறந்த ஊராக கருதப்படும் அயோத்தியில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட உள்ளது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா அயோத்தியில் ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற உள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு,  கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறும் நேரத்தை பெங்களூருவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் குறித்து கொடுத்துள்ளார்.  அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர் கோவிந்தனின்  நெருங்கிய நண்பரான அந்த பண்டிதர்  பெயர் விஜயேந்திரர்.  75 வயதான இவர் முன்னதாக ஏப்ரல் மாத அக்ஷய திருதியை நாளில்தான் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுதல் குறித்து கொடுத்துள்ளார்.  ஊரடங்கு காரணமாக அடிக்கல் நாட்டு விழா  தள்ளிப்போய்விட்டது.

வீடியோ செய்திகள்