jeevan-works-logo
booked.net
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனரை போன் செய்து பாராட்டிய ரஜினிகாந்த்..

Published: Friday, Jul 31,2020 ,10:40:06pm

நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியதோடு தான் நடிக்க ஒரு கதை யோசிக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இந்த திரைப்படத்தின் இயக்குனர்  தேசிங் பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த்,  அவரை பாராட்டினார். 

இவ்வளவு நாட்கள் கழித்து அந்த படத்தை பார்த்ததற்கு மன்னிப்பு கோரியதோடு, அவருக்கு  மிகப்பெரியதாக மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக புகழ்ந்தார்.  அதோடு தான் நடிக்க ஒரு கதை யோசிக்கும் படியும், தேசிங் பெரியசாமியை ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

 இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங் பெரியசாமி தன்னை ரஜினிகாந்த் பாராட்டியதை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ செய்திகள்