jeevan-works-logo
booked.net
குருவிகளைப் பாதுகாப்பதற்காக தெரு விளக்குகளை எரிய விடாமல் இருளில் வாழ்ந்த கிராமத்திற்கு திமுக சார்பில் நிதி !!

Published: Friday, Jul 31,2020 ,10:46:16pm

சிவகங்கை மாவட்டத்தில் குருவிகளைப் பாதுகாப்பதற்காக தெரு விளக்குகளை எரிய விடாமல் இருளில் வாழ்ந்த பொத்தகுடி கிராமத்தை பாராட்டி திமுக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பொத்தகுடி கிராமத்தில் குருவிகளின் இனப்பெருக்கத்திற்காக ஒரு மாத காலமாக இருளில் வாழ்ந்த கிராம மக்களின் மனிதாபிமான செயலைப் பாராட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று அந்த கிராமத்திற்கு சென்ற திமுக மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன்,  இந்த மனிதாபிமான செயலை பாராட்டி கிராம வளர்ச்சி நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

வீடியோ செய்திகள்