jeevan-works-logo
booked.net
பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார்!!

Published: Friday, Jul 31,2020 ,10:54:49pm

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். 

 மும்மொழிக்கொள்கை என்பது போன்ற அம்சங்களுடன் வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 அதேபோல் ஆதரவான கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த உரையின் போது புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ செய்திகள்