jeevan-works-logo
booked.net
நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகள் வழங்குவதற்கான அரசாணை!!

Published: Friday, Jul 31,2020 ,10:55:50pm

கடலூர் மாவட்டம் பெண்ணையாற்றின் குறுக்கே முப்பத்து மூன்று கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டுவதற்கான பணி களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

 தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இருபத்தி ஒரு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 இதேபோல் நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகள் வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா நிர்வாகக் குழு நிர்வாகி இடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

வீடியோ செய்திகள்