jeevan-works-logo
booked.net
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.. !! பிரசாத் ஸ்டுடீயோ மீது..

Published: Friday, Jul 31,2020 ,11:00:52pm

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள தனது பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு முதல்  தனது பணிகளை மேற்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எல்வி பிரசாத் தனது ஸ்டுடியோவில்  அலுவலகம் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த ஆண்டு முதல் தற்போது வரை இளையராஜா அந்த ஸ்டுடியோவில் தான் கிட்டத்தட்ட 1300 படங்களுக்கு மேல் ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 

பிரசாத்திற்கு பிறகு  அவரின் மகனான ரமேஷ் பிரசாத்தும் இளையராஜா அதே இடத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தார். ஆனால்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவர் மகன் சாய் பிரசாத் ஸ்டூடியோவுக்கு மின்சாரம் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுத்தியதாக கூறப்படுகிறது.  அப்போது முதல் தற்போது வரை இரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில் தனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசைக்கருவிகளை தனது ஆதரவாளர்களுடன் சாய்பிரசாத் உள்ளே புகுந்து அத்துமீறி சேதப்படுத்தியதாக இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

அதில் கொரோனா  சூழலை பயன்படுத்தி சாய் பிரசாத் ஸ்டூடியோவில் பொருட்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.

வீடியோ செய்திகள்