jeevan-works-logo
booked.net
வானிலை அறிக்கை..!! சென்னையில் மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!!

Published: Friday, Jul 31,2020 ,11:01:36pm

தர்மபுரி  மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,  விழுப்புரம்,  திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை பகுதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு இடங்களிலும்,  சேலம்,  தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 

 வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்னலுடன் கூடிய விதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். 

 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் தலா ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தருவதாகவும்,  அடுத்த 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதியில் தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வீடியோ செய்திகள்