jeevan-works-logo
booked.net
ஒகேனக்கலில் நடைபெறும் ஆடிப் பதினெட்டு விழா இந்த ஆண்டு ரத்து !! ஆட்சியர் அறிவிப்பு..

Published: Friday, Jul 31,2020 ,11:02:20pm

ஒகேனக்கலில் நடைபெறும் ஆடிப் பதினெட்டு விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆடி பதினெட்டு விழா நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தது.

 இது குறித்து பேசிய ஆட்சியர் மலர்விழி ஆடிப்பெருக்கு விழாவில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு ஆடி பதினெட்டு விழா ரத்து செய்யப்படும் என்றார்.

 மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறினார்.

 

வீடியோ செய்திகள்