jeevan-works-logo
booked.net
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை!!

Published: Friday, Jul 31,2020 ,11:04:02pm

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழக்க காரணமாக இருந்த வழக்கில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் வீட்டில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி 2012 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 42,000 ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரும் அவரது நண்பரும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டதாக கூறி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

வீடியோ செய்திகள்