jeevan-works-logo
booked.net
அனுமதியெல்லாம் ஓகே..!! ஆனா சாப்பிட ஆளே வரலியே.!! சென்னை உணவக உரிமையாளர்கள் குமுறல்..

Published: Saturday, Aug 01,2020 ,09:35:23pm

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.  தேனீர் கடைகள் உணவகங்கள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்படலாம் என்றாலும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என்று  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்கறி மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்,  உணவகங்கள், தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள்  பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகின்றன.  ஆன்லைன் வர்த்தகத்தில்  அத்தியாவசியமற்ற  பொருட்களின் விற்பனை  தொடங்கப்பட்டுள்ளது. 

இவை தவிர ஏற்கனவே உள்ள தடைகள் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும்,  ஊழியர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான உணவகங்களில் பார்சல்  மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும் பல உணவகங்களில் வாடிக்கையாளர் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கொரோனா அச்சம் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வீடியோ செய்திகள்