jeevan-works-logo
booked.net
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்..!! சிலர் பொதுமக்களுக்கு இலவசமாகவும் வழங்கினர்.

Published: Saturday, Aug 01,2020 ,09:38:34pm

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா  ஊரடங்கு எதிரொலியாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் அளவை குறைக்கும்படி அறிவுறுத்தியிருந்தது.  இதனால் விவசாயிகளிடமிருந்து லிட்டருக்கு 100 மில்லி லிட்டர் பால் குறைத்து  கொள்முதல் செய்யப்பட்டது.  ஆவின் நிர்வாக அறிவுறுத்தலால்  ஒருசில கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  இதனிடையே ஒரு சில விவசாயிகள் ஊரடங்கு காரணமாக  வருமானத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்க முன்வந்தனர்.  அதன்படி மொரப்பூர் பேருந்து நிலையத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 200 லிட்டர் பாலை இலவசமாக வழங்கினர்.  

கொரோனா காலத்தில் வருமானமிழந்து தவிக்கும் நிலையில் பால் கொள்முதலை அரசு நிறுத்திவைப்பதும் குறைப்பதும் எதற்காக..? பெருநிறுவனங்கள் தாங்கிக்கொள்ளும். சிறு விவசாயிகள் என்ன செய்வார்கள்?

வீடியோ செய்திகள்