jeevan-works-logo
booked.net
பக்ரீத் பண்டிகை அமைதியான முறையில்  கொண்டாடப்பட்டது.. கூட்டுத்தொழுகை பொது இடங்களில் இறைச்சி வெட்டுதல் போன்றவை தடை விதிக்கப்பட்டுள்ளது..

Published: Saturday, Aug 01,2020 ,09:40:13pm

இன்று பக்ரீத் பண்டிகை அமைதியான முறையில்  கொண்டாடப்பட்டது.   மசூதிகள் திறக்கப்படாத பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே தொழுகை செய்தனர்.  இறைதூதர் இப்ராஹிமின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுவது பக்ரீத் பண்டிகை.

 வழக்கமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாட்டம் தொடங்கும். கொரோனா  காரணமாக பல இடங்களில் பள்ளிவாசல் திறப்பிற்கு தடை இருப்பதால், வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.  ஆடு மாடுகளை குர்பானி கொடுத்து மக்கள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.  கூட்டுத்தொழுகை பொது இடங்களில் இறைச்சி வெட்டுதல் போன்றவை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

வீடியோ செய்திகள்