jeevan-works-logo
booked.net
தொடர் பண்டிகைகளின் காரணமாக பூக்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு!! தொடமுடியாத விலை..!!

Published: Saturday, Aug 01,2020 ,09:41:58pm

ஆடிப் பெருக்கு , பக்ரீத் மற்றும் தொடர் பண்டிகைகளின் காரணமாக பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.  போக்குவரத்து சேவை முடங்கியதால் கடந்த நான்கு மாதங்களாக பூக்களின் விலை கடுமையாக பாதிப்படைந்தது.  

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு சிறிய கோவில்களே திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் தொழில் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கி உள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

 இதனால் மக்கள் தாங்கள் வழக்கமாக கொண்டாடும் பண்டிகைகளை எளிமையாக வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர்.  பண்டிகையில்  முக்கிய பங்கு வகிப்பவை பூக்கள் என்பதால் தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளது.  இருப்பினும் போக்குவரத்து சேவை இல்லாததால் வரத்து இல்லாமல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 

 குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. 

வீடியோ செய்திகள்