jeevan-works-logo
booked.net
சீமான், ஹரிநாடாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.. நடிகை விஜயலட்சுமி ஆவேசம்..

Published: Saturday, Aug 01,2020 ,09:50:42pm

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீமான் மற்றும் ஹரி நாடார் தன்னை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார் நடிகை விஜயலட்சுமி.

சீமானுக்கு ஆதரவாக, ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றஞ்சாட்டி புதிதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி. 

சீமான் தரப்பில் கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக எங்களை ஹரி நாடார் கொச்சையான வார்த்தைகளில் பேசி மிரட்டி வருகிறார்.சீமானை யாரும் எந்த கேள்வியும் கேட்க வில்லை என்று புகார் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று, நடிகை விஜயலட்சுமி , சீமான் மற்றும் ஹரி நாடாருக்கு எதிராக கொடுத்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 தன்னுடைய கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்து, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார்.

வீடியோ செய்திகள்