jeevan-works-logo
booked.net
சுஷாந்துக்கு மன அழுத்தமெல்லாம் இல்லை..! சுஷாந்தின் பணியாளர்கள் அதிர்ச்சி தகவல்.. காதலிமீது கடும் புகார்கள்..!!

Published: Sunday, Aug 02,2020 ,09:49:21pm

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த்  வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரின் பெண் தோழியும் நடிகையுமான ரியா  சக்ரபர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியது,  நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

ரியா சக்ரபர்த்தி தான் சுஷாந்த்  சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை  ரியா சக்கரவர்த்தி மீது பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்தார்.

 நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும்,  மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகாரில் அவர் தெரிவித்தார்.  இந்த புகாரின் பேரில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியது,  நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இதுவரை பீகார் போலீசார் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், உறவினர்களை சந்தித்து உள்ளனர். இதில் அவர்கள் சுஷாந்த் சிங்கின் சகோதரி, முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே, சமையல்காரர், நண்பர், உடன்பணியாற்றியவர்கள் என 6 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர். இதேபோல நடிகரின் வங்கி கணக்கில் நடந்த பணபரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்தி உள்ளனர் ” என்றார்.

இந்நிலையில் சுஷாந்த் வீட்டில் சமையல்காரராக இருந்த அசோக் குமார் கூறியிருப்பதாவது, ஐரோப்பாவுக்கு செல்லும் முன்பு வரை ஆரோக்கியமாக இருந்தார். அவர் மருத்துவமனைக்கு சென்றோ, மாத்திரைகள் சாப்பிட்டோ நாங்கள் பார்த்தது இல்லை. ஐரோப்பாவில் இருந்து திரும்பி வந்த பிறகு சுஷாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. முதலில் டெங்கு என்று எங்களிடம் கூறினார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது தற்போது தான் தெரிய வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுஷாந்தை பார்க்க அவரின் சகோதரிகள் வந்தார்கள். ஆனால் சுஷாந்த் அவர்களை சந்திக்கவில்லை. சுஷாந்த் பிசியாக இருப்பதாகக் கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர் என்றார்.

சுஷாந்த் ஜாலியான ஆள். சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தோஷப்படுவார். அவருக்கு மன அழுத்தம் எல்லாம் இல்லை என்று சுஷாந்தின் முன்னாள் காதலியான நடிகை அங்கிதா லோகந்தே தெரிவித்துள்ளார். மேலும் தான் ரியாவுடன் சந்தோஷமாக இல்லை என்றும், அவர் தன்னை டார்ச்சர் செய்வதாகவும் சுஷாந்த் தனக்கு மெசேஜ் அனுப்பியதை அங்கிதா பீகார் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

நல்ல நடிகர், அருமையான மனிதர் ஒருவரை இழந்துவிட்டோம் என்பது மட்டும் புரிகிறது.

வீடியோ செய்திகள்