jeevan-works-logo
booked.net
வங்கிகளுக்கு அமைச்சர் வைத்த குட்டு. பணத்தை வசூலிக்க அடியாட்களை வைப்பீர்களா?

வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை வசூலிக்க பவுன்சர்களை நியமிக்க எந்த வங்கிக்கு அதிகாரம் இல்லை என்று நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் என்று மக்களவையில் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது பேசிய அவர் வங்கிகள் கடன் மீட்பு முகவர்களை நியமிக்கும்போது அவர்களது விவரங்களை போலீசார் மூலம் சரி பார்த்து முறையான அவர்களை நியமிக்க நடைமுறைகள் உள்ளதாக தெரிவித்தார்.  உடல் வலிமையானவர்களை நியமித்து வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்க எந்த வங்கிக்கு அதிகாரம் இல்லை எந்த ஒரு தெரிவித்திருக்கிறார்.

நியாயமான முறையில் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை கொடுத்துள்ளதாம். வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படும்  கடன் வசூல்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு குறிப்பிட்ட முகவர்களை கொண்டு கடனை வசூலிக்க தடை விதிப்பது பற்றி பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வீடியோ செய்திகள்