ரியா சக்ரபர்த்தி தான் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை ரியா சக்கரவர்த்தி மீது பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் பீகார் பாட்னாவில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை, மும்பைக்கு மாற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், நடிகை ரியா சக்ரபர்த்தி.
மேலும், சுஷாந்தின் அப்பாவிற்கு ஆதரவாக, பீஹார் அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மஹாராஷ்டிர அரசும், இந்த வழக்கில், தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என, கோரியுள்ளது.
இந்நிலையில், சுஷாந்த் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பாட்னாவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி வினய் திவாரி நேற்று மும்பைக்கு வந்துள்ளார். அப்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவரை கட்டாயத் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டே ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,``ஐ.பி.எஸ் வினய் திவாரி பாட்னா போலீஸ் குழுவை வழிநடத்துவதற்காக பாட்னாவிலிருந்து மும்பை வந்துள்ளார் ஆனால், இரவு 11 மணியளவில் அவரை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தியுள்ளனர். அவரின் கோரிக்கை இருந்தும் ஐ.பி.எஸ் மெஸ்ஸில் அவருக்கு தங்க இடம் வழங்கப்படவில்லை. அதனால் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம், ஒரு அரசியல்வாதி என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகை ரியாவிற்கும், அந்த அரசியல்வாதிக்கும் இருந்த தொடர்பை, சுஷாந்த் எதிர்த்தார் என்று தெரிகிறது.
. தற்கொலைக்கு முன்தினம், ரியா சக்ரபர்த்தி நடத்திய விருந்தில், சுஷாந்த் கலந்து கொண்டார் என்றும். விருந்துக்கு, அந்த அரசியல்வாதியும் வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுஷாந்த், ரியாவுடன் சண்டை போட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டாராம். இதற்கு மறுநாள்தான், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார்.
ஆகவே, நடிகர் சுஷாந்த் மரணம் இப்பொழுது அரசியல் சாயம் பூசிக்கொண்டுள்ளது. விரைவில் இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் வெளிவருவார்கள் என்று நம்பப்படுகிறது.