jeevan-works-logo
booked.net
ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா!! கொரோனாவை எதிர்த்து மோடி துணிவு.. பா.ஜ.க வின் மூத்த தலைவரான உமா பாரதி பதுங்கல்..!!

Published: Tuesday, Aug 04,2020 ,09:25:52pm

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கெனவே சில மாதங்கள் தாமதமான நிலையில், தற்போது  ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பல்வேறு வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பா.ஜ.க-வின் மூத்த தலைவரான உமா பாரதியும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா அச்சத்தின் காரணமாக அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் நபர்கள் குறித்து கவலைப்படுகிறேன். குறிப்பாக, பிரதமர் மோடியை நினைத்து கவலைப்படுகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவுக்காக மோடி நாளை அயோத்தி கிளம்பி செல்கிறார். அவர் இந்த விழாவுக்கென 3 மணி நேரம் உபி.,யில் தங்கி இருக்கிறார். 

கொரோனா அச்சம் காரணமாக சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜைவிழா நாளை காலை 11 மணிக்கு மேல் நடக்கிறது. இந்நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும். பக்தர்கள் யாரும் நேரில் வராமல் வீட்டில் இருந்தபடி விழாவினை பார்க்குமாறு அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்