jeevan-works-logo
booked.net
அம்பானிக்கு வந்த சோதனை! ஆபீஸ் விற்பனைக்கு வருதாம் சாமியோவ்!!

 கடனில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானி தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட்டு பணம் திரட்ட முடிவு செய்துள்ளார். 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகமானது  மும்பையின் சாண்டா கிராஸ் பகுதியில் அமைந்துள்ளது.  இது ஏதோ இரண்டாயிரம் மூவாயிரம் சதுர அடி அலுவலகம் என்று நினைத்துவிடாதீர்கள்.. இந்த அலுவலகம் ஏழு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை  தான் தற்போது அனில் அம்பானி விற்க முடிவு செய்துள்ளார். விற்க முடியாத பட்சத்தில் தனது அலுவலகத்தை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளார். 

இந்த அலுவலகமானது 1500 முதல் 2000 கோடி ரூபாய் வரைக்கும் விற்பனையாக கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் ரிலையன்ஸ் குழுமம் 3,000 கோடி ரூபாய் வரை திரட்ட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் பிளாக் ஸ்டோன் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தலைமை அலுவலகத்தை மும்பையின் தெற்கு பகுதிக்கு மாற்றவும் அனில் அம்பானி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

வீடியோ செய்திகள்